இந்தியாவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா பாதிப்பு! தமிழகத்தின் தற்போதைய நிலை!

Corona increased in india


Corona increased in india

இந்தியாவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளது.

கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தாக்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

corona

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,656 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் புதிதாக 40 பேர் உயிரிழந்த நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கையும் 559 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது. புதிதாக 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,520 ஆக அதிகரித்துள்ளது.