சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! படுக்கைகள் பற்றாக்குறை.! கொரோனா வார்டாக மாறும் மாநிலக் கல்லூரி விடுதி.!

சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு.! படுக்கைகள் பற்றாக்குறை.! கொரோனா வார்டாக மாறும் மாநிலக் கல்லூரி விடுதி.!


corona increased in chennai

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் ஐந்தாயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

சென்னையில் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர். கொரோனா சிகிச்சைக்காக தமிழக அரசு கிண்டி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது. தற்போது இரு மருத்துவமனைகளிலும் அனைத்து படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளன.

சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தநிலையில், சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநிலக் கல்லூரியின் மாணவர் விடுதியில் 250 கரோனா படுக்கைகள் தயார் செய்யப்படுகின்றன.