தமிழகம் மருத்துவம்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா தொற்று உறுதியானது எத்தனைபேருக்கு.? அதிர்ச்சி தகவல்!

Summary:

corona increased

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி  உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ்,வேகமாக பரவ தொடங்கி இருக்கிறது. கொரானாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் நோய்க்கிருமி பரவும் வேகத்தை முழுமையாக கட்டுப் படுத்த முடியவில்லை.

நேற்றுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து, பலி எண்ணிக்கை 100-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தபோதிலும், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

டெல்லி மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.  மாநாட்டில் பங்கேற்ற மீதம் உள்ளவர்களையும் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கு மருத்துவ சோதனைக்காக மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அவர்களில் நேற்று மட்டும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மேலும், பெரவள்ளூரில் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு மருதுவானமையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


Advertisement