தமிழகம் Covid-19

மக்களுக்காக உழைக்கும் போலீசாரை தொடர்ந்து தாக்கும் கொரோனா! டிஜிபி அலுவலகத்தில் ஊடுருவிய வைரஸ்!

Summary:

Corona in dgp office

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

திகமிழகத்தில் சென்னையில் மட்டும் நாள்தோறும் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. சென்னையில் ஏற்கனவே 4 உதவி ஆய்வாளர்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன், உளவுத்துறை காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும், இரண்டு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொழில் நுட்ப பிரிவில் பணிபுரியும், ஒரு போலீஸ்காரருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. மேலும், அவரது உறவினர்கள், எட்டு பேருக்கும் தொற்று உறுதியானது. மேலும் டி.ஜி.பி., அலுவலக துப்புரவு பணியாளர்கள், மூன்று பேருக்கு, நேற்று கொரோனா தொற்று உறுதியானது. 

இந்தநிலையில், சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

காவல் துறை மட்டுமின்றி பல துறை சார்பாக கொரோனாவை தடுக்க கடும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அனைவரும் இதனை கவனத்தில் கொண்டு சமூக விலகலை கடைபிடித்து கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்போம். 


Advertisement