கணினி ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு அதிரடியாக போட்டித்தேர்வை அறிவித்துள்ள தமிழக அரசு.!

கணினி ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு அதிரடியாக போட்டித்தேர்வை அறிவித்துள்ள தமிழக அரசு.!computer teacher post announced tamilnadu gvt

இதுவரை தமிழக அரசு பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை தகுதித் தேர்வு, போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வந்தது ஆசிரியர் தேர்வு வாரியம். ஆனால் கணினி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை.

இதனால் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான படிப்பினை முடித்தவர்கள் அரசு வேலை பெற முடியாத நிலை உருவானது. ஆகவே அவர்கள் எங்களுக்கும் பணி வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 814 முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வரும் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இது குறித்து கூடுதல் தகவல்களை www.trb.tn.nic.in என்ற இணைய முகவரியில் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.