மக்களே உஷார்.! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனே புகார் அளியுங்கள்.! போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி.!

மக்களே உஷார்.! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனே புகார் அளியுங்கள்.! போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி.!



Complaints can be made if extra charges are levied on Omni buses

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.20 முதல் 18.11.20 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 425 6151 மூலம் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

வருகிற நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பல மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளில் (ஆம்னி பஸ்களில்) கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Omni bus

இந்த குழுவினர் பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்த உள்ளனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு பேருந்துகளில் ஏறி சோதனை செய்வார்கள் என்றும், அப்போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டாலோ, அளவுக்கு மீறி அதிக பயணிகளை ஏற்றிச்சென்றாலோ கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.