AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
Breaking: ஹேப்பி நியூஸ்.. மாத தொடக்கத்திலேயே குறைந்தது சிலிண்டர் விலை.. தற்போதைய நிலவரம்.!
டிசம்பர் மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.10.50 குறைந்துள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் எண்ணெய் & எரிவாயு விற்பனை நிறுவனங்கள் சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்பது மாற்றம் செய்து அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பின் மூலமாக, ஒவ்வொரு மாதத்திலும் சமையல் சிலிண்டர் எரிவாயு விலை என்பது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் சிலிண்டர் விலை:
ஆனால், கடந்த பல மாதங்களாகவே வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை என்பது எந்தவித மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. அதே நேரத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை என்பது மாற்றத்துடன் நீடிக்கிறது. 2025 டிசம்பர் மாதத்துக்கான சிலிண்டர் விலை இறக்கத்துடன் இருக்கலாம் என முன்னதாக கணிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: #Breaking: மாதத்தின் முதல் நாள்.. பெட்ரோல், டீசல் விலை., சிலிண்டர் விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!

வணிக சிலிண்டர் விலை:
இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்கான 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ரூ.10.50 குறைக்கப்பட்டு, ரூ.1739.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தாவிலும் விலை குறைந்துள்ளது.