"அப்படி அந்த போன்ல என்ன தான் இருக்கோ..." தாய் திட்டியதால் ஆத்திரம்.!! கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.!!



college-student-commits-suicide-for-mother-complain-abo

திருப்பத்தூர் மாவட்டம் சின்னவட்டனூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் காளீஸ்வரி (19). தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் தெரிந்து பெற்றோர் கல்லூரிக்கு செல்லக்கூடாது என  மகளை கண்டித்துள்ளனர். பெற்றோர் கூறியதை ஏற்காமல் காளீஸ்வரி சண்டை போட்ட போதிலும் பெற்றோர் கல்லூரிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காளீஸ்வரி தன் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.  

tamilnadu

இதனை பார்த்து கோபமடைந்த தாய் எப்பொழுதும் செல்போன் பார்த்துக் கொண்டே இருக்கிறாய், அதை வைத்து என்னதான் செய்யப் போகிறாய் என கேட்டு செல்போனை பறித்து கொண்டார். இந்த செயலால் மீண்டும் மன உளைச்சலின் உச்சிக்கே சென்ற காளீஸ்வரி, பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்ய வற்புறுத்தியாதால் விபரீதம்... இளம் பெண் தற்கொலை.!! காதலன் கைது.!!

இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காளீஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: "நீ இல்லனா நானும் இல்ல... " காதலை பிரித்த சமூகம்.!! இளம் ஜோடி எடுத்த விபரீத முடிவு.!!