அன்னைக்கி பெயிண்டர், இன்னைக்கி நடிகர் - நடிகர் சூரி பெருமிதம்.!
ரூ.1000 கொடுக்குறேன் வா.. 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல்.!

சாலையில் தனியே நடந்து வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் மைதானத்தில், பொங்கல் விழா கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஏராளமானோர் கலந்துகொண்டு, பின் வீடு திரும்பினர். அப்போது, 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியே வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கும்பல், பெண் தனியாக செல்வதை பார்த்து, ரூ.1000 தருகிறோம் எங்களுடன் வா என பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் பெண் அலறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவை: 2வது ரேங்க் எடுத்ததால் விரக்தி; 14 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!
பாலியல் தொல்லை
மேலும், கும்பலை பார்த்து தெருநாய்களை குறைந்துள்ளன. சத்தம் கேட்டு வந்த இளம்பெண்ணின் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டு அதிர்ச்சியுற்று, அவரை மீட்டு வந்தார்.
3 பேர் கும்பல்
மூவர் கும்பல் தொடர்ந்து இளம்பெண்ணின் வீட்டில் நோட்டமிட, அவர்களை இளம்பெண்ணின் தந்தை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, மூவர் கும்பல் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் ஆட்டோ ஓட்டுநராக கண்ணன், பாபு, ரவி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்போருக்கு, பெண்ணை பின்தொடர்ந்தால் கடுமையான தண்டனை மற்றும் சிறை தண்டனை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சட்டம் கொண்டு வரவுள்ள நிலையில், பெண்ணை பின்தொடர்ந்து அவதூறாக அழைத்து, அதனை தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.
இவ்வாறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே, பெண்பிள்ளைகளை பெற்றோரின் ஆதங்க குரலாக இருக்கிறது.
இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. குடியிருப்பு வளாகம் அருகே இளைஞர் வெட்டிப்படுகொலை.. அச்சத்தில் மக்கள்.!