#Breaking: தமிழ்த் திரைப்பட நடிகர் & கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி புற்றுநோயால் காலமானார்...!
தனியார் பேருந்து மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக் குமார் (வயது 32). இவரின் மனைவி சுசீலா (வயது 30). தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 09ம் தேதி பெரியபாளையம் பகுதியில் இவர்கள் இருசக்கர வானகத்தில் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் இருசக்கர வாகனத்தின் மீது அசுரவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் அசோக் குமார் மற்றும் அவரின் 3 வயதுடைய மகன் சர்வானந்த் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுசீலா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விபத்து குறித்த பதைபதைப்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.