தமிழகம்

தாயில்லாத கர்ப்பிணிக்கு தாயாக மாறி வளைகாப்பு நடத்திய அரசு அதிகாரிகள் - நெகிழ்ச்சி செயல்..!

Summary:

தாயில்லாத கர்ப்பிணிக்கு தாயாக மாறி வளைகாப்பு நடத்திய அரசு அதிகாரிகள் - நெகிழ்ச்சி செயல்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சார்ந்தவர் குணவதி (வயது 29). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள
அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். 

கடந்த ஒரு வருடமாக அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குணவதி பணியாற்றி வரும் நிலையில், தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு தாயார் இல்லாத நிலையில், வளைகாப்பு நடத்தப்படுமா? என்று மன வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

அவரின் மனதை புரிந்து கொண்ட சக அதிகாரிகள், அவருக்கு நேற்று தாய் ஸ்தானத்திலிருந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இதனால் பெண்மணி குணவதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.


Advertisement