எனக்கு போட்டியா அவன் தொழில் தொடங்கலாமா? இந்து முன்னணி ஆதரவாளரின் வெறிச்செயலால் அரங்கேறிய படுகொலை.!

எனக்கு போட்டியா அவன் தொழில் தொடங்கலாமா? இந்து முன்னணி ஆதரவாளரின் வெறிச்செயலால் அரங்கேறிய படுகொலை.!


Coimbatore Annur Financer Murder Case Hindu Munnani Party Supporter and 4 Arrested

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், நாகம்மாபுதூரை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர், இந்து முன்னணி அமைப்பில் அன்னூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பின்னர், கடந்த சில மதத்திற்கு முன்னதாக பணியில் இருந்து விலகி, தனியாக பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். 

இந்து முன்னணி அமைப்பில் இருந்து வந்த சரவண சுந்தரம், அந்த அமைப்பில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருக்கும் - சரவண சுந்தரத்திற்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், சரவண சுந்தரம் அன்னூரை அடுத்துள்ள மைல்கல் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்செல்வனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

கொலையை செய்த தமிழ்செல்வன் மற்றும் அவரின் நண்பரான இந்து முன்னணியை சேர்ந்த ராஜராஜன் ஆகியோர் அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். கொலைக்கு பின்னணியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் காரணம் என்று சரவண சுந்தரத்தின் உறவினர்கள் போராட்டம் நடத்த, காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

Coimbatore

விசாரணையில், சூர்யா தேவி பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தவே, சரவண சுந்தரத்தின் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. மேலும், சரவண சுந்தரம் தனியே சென்று தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்து கொலை செய்துள்ளனர். 

தமிழ்ச்செல்வனின் பணம் கொடுக்கல் - வாங்கல் விவகாரத்தை தெரிந்துகொண்ட ராஜேந்திரன், அவர்கள் மூலமாகவே சரவண சுந்தரத்தை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, ராஜேந்திரன் மற்றும் ரங்கநாதனை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.