பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்த கையோடு CM விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி..! 73,000 பயனாளிகள் பயன்... ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு.!!!



cm-vijay-opens-perambur-mla-office-launches-new-ration-

பெரம்பூர் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். அதனுடன், தமிழகம் முழுவதும் விடுபட்ட தகுதியான மக்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்து அதன் முதல் கட்ட பணிகளை ஆரம்பித்தார்.

புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்

விழாவைத் தொடர்ந்து, புதிய குடும்ப அட்டை பெறும் பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருள்களை முதலமைச்சர் தனது கரங்களால் வழங்கினார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் பொதுமக்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: புதிய ரேஷன் கார்டு வாங்குபவர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி கூறிய முக்கிய அறிவிப்பு !!!

நியாயவிலைக் கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு

இதையடுத்து, அங்கிருந்த நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் பொருட்களின் இருப்பு, விநியோகத்தின் தரம் மற்றும் சேவை நடைமுறைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

73 ஆயிரம் பயனாளிகளுக்கு முதற்கட்ட விநியோகம்

தகவலின்படி, இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் சுமார் 73 ஆயிரம் தகுதியான பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. நீண்ட நாட்களாக புதிய குடும்ப அட்டைக்காக காத்திருந்த பலரிடமும் இந்த அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: BREAKING : மகிழ்ச்சி செய்தி! புதிய ரேஷன் அட்டைகாரர்களுக்கு.... தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு...!!!