தமிழகம்

அனைத்து மாநிலங்களிலும் தமிழை விருப்ப பாடமாக இணைக்க தமிழக முதல்வர் வேண்டுகோள்!

Summary:

Cm palanisamy requested pm to ad tamil as optional

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து மாநிலங்களிலும் தமிழை விருப்ப பாடமாக இணைக்க வேண்டும் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி ரங்கன் குழு புதிய கல்விக்கொள்கை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.

இந்தற்கு தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது வரைவு அறிக்கை மட்டுமே என்று மத்திய அரசு கூறினாலும், தொடர்ந்து எதிர்ப்பு எழுந்துகொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து, வரைவு அறிக்கையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதில், இந்தி கட்டாயமல்ல, விருப்பப் பாடமாக இருக்கும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் ஒன்றினை விடுதீதுள்ளார். அதில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழை மற்ற மாநிலங்களில் விருப்ப பாடமாக இணைக்க பரிந்துரை செய்ய வேண்டும். இது உலகின் தொன்மையான மொழிக்கு ஆற்றும் மிகப்பெரிய சேவையாக அமையும்" என பதிவிட்டுள்ளார்.


தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் இந்த சூழலில் முதல்வரின் இந்த வேண்டுகோள் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது போன்று அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement