ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
பச்சை துண்டை கழுத்தில் அணிந்து மாட்டு வண்டி ஓட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.! உச்சகட்ட மகிழ்ச்சியில் விவசாயிகள்.!

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐ.டி.சி. நிறுவன விழா, ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழா, கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலையைத் திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கவிநாடு கண்மாய் ஏரியில் விவசாயிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கவிநாடு கண்மாய் ஏரி தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் அங்கு வந்தார். அப்போது விவசாயிகள் 300க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் வந்து முதலமைச்சரை காண்பதற்காக தயாராக நின்றனர்.
அங்கிருந்த மாட்டு வண்டிகளில் அமர்ந்திருந்த விவசாயிகள் அனைவரும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்து இருந்தனர். அங்கிருந்த விவசாயிகளை பார்த்து மகிழ்ச்சியடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானும் ஒரு விவசாயி என்பதை உணர்த்தும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சை துண்டை கழுத்தில் அணிந்துகொண்டு ஒரு மாட்டு வண்டியில் ஏறினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏறி நின்றார். இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.