காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த; காலநிலை மாற்ற இயக்கம்...! முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்..!



Climate change movement to raise awareness about climate change

காலநிலைக்கு ஏற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து காலநிலை வல்லுநர்கள், மூத்த அரசு அதிகாரிகள், கலந்து கொண்ட உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் உண்டாகும் பாதிப்புகளை தமிழக அரசு குறைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு, மேலும் ஒரு முயற்சியாக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த இயக்கத்தின் மூலம்,  காலநிலைக்கு ஏற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து காலநிலை வல்லுநர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. 

இதில் கலந்து கொண்ட, கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு இவ்வாறு கூறினார், காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 25 அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெற்ற பசுமை பள்ளிகளாக மாற்றியமைக்கப்படும். மேலும் இதற்காக அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் கடலோரத்தில் அமைந்துள்ளதால் அந்த மாவட்டங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க தமிழக அரசு, இயற்கை முறையிலான பயோஷீல்ட் என்ற புதிய முறையை ஏற்படுத்த இருப்பதாகவும், காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இன்று மாலை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.