திருவண்ணாமலை குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்! கொரோனோ பரிசோதனையில் வெளிவந்த உண்மை!

திருவண்ணாமலை குகையில் பதுங்கியிருந்த சீன வாலிபர்! கொரோனோ பரிசோதனையில் வெளிவந்த உண்மை!


china-youngman-lurking-in-cave

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி 14,378 பேர் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் 480 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

Coronovirus

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தை சேர்ந்தவர் யோருய் யாங். 35 வயது நிரம்பிய இவர், இந்தியாவின் ஆன்மிக வழிமுறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.இந்த நிலையில் தமிழகத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட அவர் ஊரடங்கு காரணமாக சொந்த நாட்டிற்கு திரும்ப செல்ல முடியாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதை குகை ஒன்றில் 11 நாட்களாக தங்கி வந்துள்ளார். 
இந்நிலையில் அங்கு விரைந்த போலிசார்கள் அந்த சீன இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு ஆய்வு முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை அவரை மருத்துவமனையிலேயே தங்க வைக்கபடவுள்ளதாக கூறப்படுகிறது.