தமிழகம்

கொரோனோவை விரட்ட கறிவிருந்து! வைரலான வீடியோவால் வசமாக சிக்கிய வாலிபர்கள்! பரபரப்பு சம்பவம்!

Summary:

Chicken treat for throw coronovirus

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் இந்தியாவில் பரவிய நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர், தியாக சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர், அந்த பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு கறிவிருந்து கொடுத்துள்ளார். மேலும் ஒரே இலையில் சிக்கன், சாப்பாட்டை போட்டு 30க்கும் மேற்பட்டோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். 

கொரோனா விருந்து என்ற பெயரில் நடந்த இந்த கறிவிருந்து வீடியோ பேஸ்புக் லைவ் மற்றும் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் ஊரடங்கில், கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல், எவ்வித பாதுகாப்பும் இன்றி இளைஞர்கள் செய்த இந்த காரியத்தை கண்ட போலீஸார் உடனடியாக விரைந்து சிவகுருவை கைது செய்துள்ளதாகவும், மேலும் விருந்தில் கலந்துகொண்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Advertisement