15 வயது சிறுமியை சீரழித்த அக்கா கணவர்; காதல் திருமணமான 6 மாதத்தில் அதிர்ச்சி செயல்.!

15 வயது சிறுமியை சீரழித்த அக்கா கணவர்; காதல் திருமணமான 6 மாதத்தில் அதிர்ச்சி செயல்.!


Chennai Virukambakkam Minor Girl Abused by Uncle 


சென்னையில் உள்ள விருகம்பாக்கம், குமரன் காலனி பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய பெண்மணி கலைவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார். தனது கணவர் முகமது அல்தாப்புடன்  கலைவாணியின் மகள் தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

கலைவாணியின் இளயமகள், விருகம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி சிறுமிக்கு வயிறு வீக்கமாகி வலி ஏற்பட்டுள்ளது. இதனால் துடித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  

அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ந்துபோன தாய் மக்களிடம் விசாரித்தபோது, அக்கா கணவரான முகமது வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் கூறி இருக்கிறார். 

இதற்குப்பின் சிறுமி கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இடநியாயடுத்து, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் முகமது அல்தாப்பை கைது செய்ய வலைவீசி இருக்கின்றனர்.