பட்டாக்கத்தியுடன்., ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் ரகளை.! பீதியில் பொதுமக்கள்.!

பட்டாக்கத்தியுடன்., ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் ரகளை.! பீதியில் பொதுமக்கள்.!


Chennai Velachery college students atrocity in train

சென்னை வேளச்சேரியில் பறக்கும் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் அபாய சங்கிலியை இழுத்து ரகளை நேற்று ஈடுபட்டனர். சேப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரையில் இந்த மாணவர்களின் சேட்டை தொடர்ந்தது. 

Chrnnai

தங்களது கைகளில் கூர்மையான பட்டாக்கத்தி மற்றும் பைப்களை வைத்துக்கொண்டு ரயிலில் வரும் மற்ற பயணிகளை அச்சுறுத்தும் விதமாக அவர்கள் ரகளை செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து அபாய சங்கிலியை இழுத்து பிடித்த காரணத்தால் மின்சார ரயிலானது அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. 

இந்த மாணவர்களின் மோசமான நடவடிக்கையால் பயணிகள் பலரும் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமலும் இவர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டு நடமாடியதால் அச்சுத்துடனும் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். நேற்று நடந்த இந்த சம்பவத்தின் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Chrnnai

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ரகளை ஈடுபட்ட மூன்று கல்லூரி மாணவர்கள் ரயில்வே போலீசாரால் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.