ஆசிரியர்களை கழிவறையில் பூட்டி.., ஆசிரியை - மாணவிகளிடம் தகாத செயல்.. அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் கைது.! பகீர் தகவல்.!Chennai Thiruvotriyur School Students 3 Arrested

பள்ளியில் அறுந்த வாலாக சுற்றிய 3 மாணவர்கள் ஆசிரியை - மாணவிகள் முன்னிலையில் தகாத செயலில் ஈடுபட்ட நிலையில், ஆசிரியர்களை கழிவறைக்குள் வைத்து பூட்டி அட்டூழியம் செய்துள்ளனர். இறுதியில் பொறுமையை இழந்த ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள திருவெற்றியூர் பேருந்து நிலையம் அருகில், ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதே பள்ளியில் 12 ஆம் வகுப்பில் பயின்று வரும் 3 மாணவர்கள் பாடம் நடத்தும் ஆசிரியை & மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். மேலும், பள்ளியில் ஆசிரியர்கள் கழிப்பறை செல்லும் நேரத்தில் கதவை வெளியே இருந்து தாழ்பாள் போட்டு சென்றுள்ளனர். 

இதனை கண்டறிந்த ஆசிரியர்கள் 3 மாணவர்களுக்கும் அறிவுரை கூறி கண்டித்தாலும் அவர்கள் அதனை கேட்டபாடில்லை. மாறாக மாணவர்களை துன்புறுத்துவது, கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டுவது, பிற வகுப்பறைகளில் சென்று அமர்ந்து ஆசிரியருக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது என தொல்லை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரத்தில் 3 மாணவர்களும் ஆசிரியர்களை கழிவறையில் வைத்து பூட்டிவிடவே, அதனை கண்டிகையில் ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் தகவல் பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கவே, அதிகாரிகள் பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தி திருவெற்றியூர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியரின் பேரில் புகாரளிக்க பரிந்துரை செய்தனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி 3 மாணவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெறுகிறது.