செல்போன் கடை பணியாளர்களை கடத்தி ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல் : 5 பேர் கும்பல் கைது..!

செல்போன் கடை பணியாளர்களை கடத்தி ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டல் : 5 பேர் கும்பல் கைது..!


Chennai Thiruverkadu 5 Man team Kidnaped 2 Youths Intimate Money

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் பகுதியில் செல்போன் கடையை நடத்தி வந்தவர் டில்லி கணேஷ் (வயது 25). இவரின் கடையில் பணியாற்றி வருபவர் முகம்மது சாந்தகுமார், இப்ராஹிம். இவர்கள் இருவரும் கடந்த 21ம் தேதி இரவில் கடையை மூடிவிட்டு, சாவியை உரிமையாளரிடம் கொடுக்க நடந்து சென்றுகொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில், இவர்களை இடைமறித்த 5 பேர் கும்பல், வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் இருவரையும் ஏற்றிக்கொண்டு என்.ஜி.ஜி.ஓ காலனி பார்க்கிற்கு கடத்தி சென்றுள்ளனர். அங்கு இருந்து செல்போன் கடை உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளது. 

chennai

இந்த தகவலை அறிந்த உரிமையாளர், திருவள்ளூர் நகர காவல் நிலைய ஆய்வாளருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 5 பேர் கும்பலை அதிரடியாக மடக்கிப்பிடித்தனர். இவர்களில் ஒருவன் தப்பி சென்றுவிட, சிக்கிய 4 போரையும் அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

விசாரணையில், மேட்டுத்தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 23), அன்சாரி ஷெரீப் (வயது 23), உதயா (வயது 22), பிராங்க்ளின் (வயது 19), மற்றொரு ஆகாஷ் (வயது 19) என்பது தெரியவந்தது. தப்பி சென்ற மோகன் (வயது 26) என்பவருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர். கைதான அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.