திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கேவலமான செயல்..! பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!!Chennai Teynampet Govt Medical College Professor Sexual harassment Navy Force Officer Wife

சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நட்சத்திர விடுதிக்கு, நேற்று இரவில் கடலோர காவல்படை அதிகாரி தனது மனைவியுடன் சென்றுள்ளார். 

அப்போது, மதுபோதையில் இருந்த வாலிபர், கடற்படை அதிகாரியின் மனைவியிடம் அத்துமீறி இருக்கிறார். மேலும், பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சிக்கவே, கடற்படை அதிகாரி வாலிபரை எச்சரித்துள்ளார். 

chennai

போதையில் இருந்தவர் தொடர்ந்து அத்துமீற முயற்சிக்க, இதுகுறித்து கடலோர காவல்படை அதிகாரி காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வாலிபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். 

விசாரணையில், வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி வரும் சூரிய பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.