#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
#BREAKING: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தேனி, விருதுநகர், கோவை உட்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவி வரும் சுழற்சி காற்று மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 3 முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு தேனி, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.