கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
#BigBreaking: தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கிறது. இதனால் அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்யும்.