#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!



Chennai RMC Announce Rain


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நேற்று தென்மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி - காரைக்கால் பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் 15 மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

chennai

அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் விடிய வித்யா மழை பெய்து வருவதும், மழையால் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.