நள்ளிரவில் வீதியில் குதித்த சென்னை மக்கள்.. தொடர் மின்வெட்டால் போர்க்கொடி.!
சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக மின்வெட்டு தொடர்ந்த காரணத்தால் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உண்டாகியது.
அலட்சியமான செயல்?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே விட்டுவிட்டு என பலமணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் அவ்வப்போது சாலை மறியல் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்வெட்டு பிரச்னையை சரிசெய்யாமல் அலட்சியமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... இந்த மாவட்டத்தில் நாளை (டிச..2) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு..!
தூக்கமின்றி தவிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது. குறிப்பாக கோடையின் தாக்கத்தால் வெயிலின் கொடுமை அதிகரித்து வரும் நிலையில், அறிவிக்கப்படாத மின்வெட்டு பிரச்சனை காரணமாக, மக்கள் துயரத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். நள்ளிரவு நேரத்தில் திடீரென ஏற்படும் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய பதில் இல்லை:
மின்சாரம் எப்போது வரும்? என்பது தெரியாமல் பணிக்கு செல்வோரும் அவதிப்படுவதால், கடும் மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகின்றனர். மேலும், சிறுகுறு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கணினி நிறுவனங்கள் முடங்கி இருப்பதால் பொருளாதார இழப்பும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு புகார் அளிக்க முற்பட்டால், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
தொடர் மின்வெட்டு காரணமாக கொளத்தூர் தாதாக்குப்பம், திருவொற்றியூர் உட்பட பல இடங்களில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. திருத்தணி, திருவள்ளூர் உட்பட பிற நகரங்களில் இருக்கும் கிராமங்களில் பலமணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!