தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
14 வயது சிறுவன் சரமாரியாக குத்தி கொலை.. ஏரிக்கரையில் சடலம் மீட்பு.. சென்னையில் பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள செங்குன்றம் சி.கே மாணிக்கனார் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் கோபி. இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் நாகராஜ் (வயது 14). நாகராஜ் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், தற்போது தண்ணீர் கம்பெனியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் நாகராஜை நண்பர் வெளியே அழைத்து சென்ற நிலையில், மீண்டும் நாகராஜ் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் பெற்றோர் தேடிப்பார்த்தும் காணாத காரணத்தால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் புழல் ஏரிக்கரை பகுதியில் நாகராஜ் இரத்த காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் கழுத்து, வயிறு உட்பட உடலின் பல்வேறு பகுதிகளில் இரத்த காயங்கள் இருந்ததால், அவரை மர்ம நபர்கள் குத்தி கொலை செய்தது அம்பலமானது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செங்குன்றம் காவல் துறையினர், நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.