அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களை கதிகளங்க வைக்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் பகீர் தகவல்..!! 

அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களை கதிகளங்க வைக்கப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் பகீர் தகவல்..!! 



chennai rain report about heavy rain

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கரூர், திருப்பத்தூர், நாமக்கல், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது

heavy rain

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில்  இருக்கக்கூடும்.