கணவனை விட்டு கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனை தேடிச்சென்ற 19 வயது இளம்பெண்.. கணவன் வைத்த ட்விஸ்ட்டால் இளைஞர் துள்ளத்துடிக்க கொலை.!

கணவனை விட்டு கைக்குழந்தையுடன் முன்னாள் காதலனை தேடிச்சென்ற 19 வயது இளம்பெண்.. கணவன் வைத்த ட்விஸ்ட்டால் இளைஞர் துள்ளத்துடிக்க கொலை.!


Chennai Puzhal Man Murder

 

17 வயதில் காதலில் விழுந்த மாணவிக்கு திருமண வயது வந்ததும், உறவினருடன் பெற்றோர் திருமணம் செய்து வைக்க, கைக்குழந்தையோடு பெண் 2 மாதங்களுக்கு முன் எடுத்த முடிவால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை புழல், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சுதா சுந்தர் (வயது 22), அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது டூவீலரில் திருமணமான காதலி, அவரின் கைக்குழந்தையோடு புழல் கல்பாளையம் பகுதியில் சென்றபோது, 5 பேர்கொண்ட கும்பலால் இடைமறிக்கப்பட்டு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக கொளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கொலை குறித்து சுதா சுந்தருடன் வருகை தந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்கையில், அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் நடத்திய பயங்கர செயல் அம்பலமானது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஆவடி, மோரை பகுதியில் வசித்து வந்த ராகவிக்கும் (வயது 19) - சுதா சுந்தருக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறி, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் ராகவியின் 17-18 வயதில் நடந்துள்ளது. 

chennai

மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், உறவினரான வசந்த் என்ற இளைஞரை ராகவிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ராகவி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதற்கிடையே, ராகவி - கணவர் வசந்த் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தனது முன்னாள் காதலரை தேடி சென்ற ராகவி, சுதா சுந்தருடன் புழல் லட்சுமிபுரத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். திருமணத்திற்கு பின்னர் தனது மனைவி மீது அபரீத காதல் கொண்ட வசந்த், அவரின் முடிவை ஏற்க முடியாமல் 2 மாதங்களாக அவதிப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, மனைவியின் முன்னாள் காதலனை கொன்றுவிடலாம் என திட்டம் தீட்டிய வசந்த், 5 பேருடன் சேர்ந்து சுதா சுந்தரை நடுரோட்டில் தீர்த்துக்கட்டி இருக்கிறார். தற்போது குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை தனிப்படை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.