பெற்றோரின் அலட்சியத்தால் பெருந்துயரம்.. 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!

பெற்றோரின் அலட்சியத்தால் பெருந்துயரம்.. 4 வயது குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!


chennai-poonamallee-child-baby-died-slipped-from-floor

குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சாட்சியாக அமைந்துள்ளது.

சென்னையில் உள்ள பூந்தமல்லி, கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி (வயது 35). இவர் பூந்தமல்லி வருவாய்துறையில் பணியாற்றி வருகிறார். ரவியின் மனைவி சந்தியா. தம்பதிகளுக்கு ஆரோ என்ற 8 வயது மகனும், வின்சி என்ற 4 வயது மகளும் இருக்கின்றனர். 

நேற்று காலை நேரத்தில் ரவி தனது மனைவி மற்றும் மகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றுவிடவே, மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கையில் வின்சியை மயக்க நிலையில் இருந்துள்ளார் மகளை மீட்ட ரவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வின்சி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்கையில், சிறுமி வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுவது உறுதியானது.