1000 ரௌடிகள் லிஸ்ட் ரெடி.. அத்துமீறினால் என்கவுண்டர்.. சென்னையில் காவல்துறை வேட்டை ஆரம்பம்.!

1000 ரௌடிகள் லிஸ்ட் ரெடி.. அத்துமீறினால் என்கவுண்டர்.. சென்னையில் காவல்துறை வேட்டை ஆரம்பம்.!


Chennai Police Takes Against Action to Rowdy List Taken by Cops

தலைநகரின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் என்கவுண்டர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன. இதனால் ரௌடிகளின் கூடாரம் கதிகலங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ரௌடியிசத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகரை கலக்கிவந்த அயோத்திகுப்பன் வீரமணி முதல் பல ரௌடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுடன் கேடான பாதையை தேர்வு செய்தவர்கள் மீண்டும் குழுவை அமைத்து ரௌடியிஸத்தில் களமிறங்குவதால் காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

தென் சென்னை மற்றும் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சிறுவயதில் இருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் பின்னாளில் ரௌடியாக உருவெடுத்து பெரும்புள்ளியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், தற்போது பெரும்புள்ளிகள் போல இருக்கும் ரௌடிகள், சிறார்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று சீரழித்து கொலைகள் செய்ய வைத்துள்ளனர். அடுத்தடுத்து சென்னை நகரில் நடந்து வந்த குற்றங்களை கருத்தில் கொண்டு, ரௌடிகளின் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

chennai

இதனையடுத்து, சென்னையை கலக்கி வரும் 1000 ற்கும் மேற்பட்ட ரௌடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர்கள், மாநகர துணை ஆணையர்கள் ரஒடிகளின் பட்டியல், சிறையில் இருந்து விடுதலையான ரௌடிகள், தலைமறைவானவர்கள் பட்டியலை சேகரித்து, அதனை தயாராக வைத்திருக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரௌடிகளை பொறுத்த வரையில் ஏ பிளஸ், ஏ, பி, சி என்ற 4 பிரிவுகள் உள்ள நிலையில், இந்த 4 பிரிவில் உள்ள ரௌடிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே தாதா போல வலம்வரும் சிறார்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளது. இதனால் அடிதடி, ரகளையில் ஈடுபடும் சிறிய ரௌடிகளின் மீதும் காவல்துறை தனது கவனத்தை திருப்பியுள்ளது. மேலும், எல்லைமீறும் ரௌடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளி, மாநகரின் குற்றம் ஒழுங்கை பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் சரணடை அல்லது என்கவுண்டர் என்ற பாணியில் வேட்டை சம்பவங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.