குடிபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைத்து நொறுக்கிய இளம்பெண்.! சென்னையில் சம்பவம்.!

குடிபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைத்து நொறுக்கிய இளம்பெண்.! சென்னையில் சம்பவம்.!


Chennai Parry s Corner MTC Bus Route No 35 Attacked by Drunken Woman Break Glass with stone

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கொரட்டூர் நோக்கி, நேற்று முன்தினம் இரவில் வழித்தட எண் 35 மாநகர அரசு பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து பட்டாளம் ஸ்டாரண்ஸ் சாலை வழியாக செல்கையில், நடைமேடையில் 21 வயது பெண்மணி நின்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவர் யாரும் எதிர்பாராத வேலையில், கான்க்ரீட் கல்லை தூக்கி பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது வீசியதில், பேருந்தின் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது. 

chennai

பேருந்தை ஓட்டுநர் அப்படியே ஓரமாக நிறுத்த, பேருந்தில் வந்த பெண்கள் உதவியுடன் அந்த பெண் பிடித்து வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த ஓட்டேரி காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், பெண்மணி அம்பத்தூர் இரயில்வே நடைமேடையில் வசித்து வரும் வேளாங்கண்ணி (வயது 21) என்பதும், மதுபோதையில் இருப்பதும் அம்பலமானது. மதுபோதையில் பெண்மணி பேருந்தின் கண்ணாடியை உடைத்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.