தமிழகம்

போதையில் மகளிடம் அத்துமீற முயற்சி.. காளியாக மாறி மகளை காப்பாற்றிய தாய்.. செத்துப்போன கணவன்.!

Summary:

போதையில் மகளிடம் அத்துமீற முயற்சி.. காளியாக மாறி மகளை காப்பாற்றிய தாய்.. செத்துப்போன கணவன்.!

மதுபோதையில் தான் பெற்றெடுத்த மகளிடம் அத்துமீற முயற்சித்த கணவனை, தாய் காளியாக மாறி சுத்தியால் அடித்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள ஓட்டேரி, வாழைமா நகர் 9 ஆவது தெருவில் வசித்து வருபவர் பிரதீப் (வயது 43). இவரின் மனைவி ப்ரீத்தி (வயது 41). இவர்கள் இருவருக்கும் ஸ்ரீ வைஷ்ணவி (வயது 20), கார்த்திக் (வயது 10) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்தும் பழக்கத்தை வைத்திருந்த பிரதீப், தினமும் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் மதுபானம் அருந்திவிட்டு தகராறு செய்த நிலையில், தனது சொந்த மகளிடமே பிரதீப் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் வந்த தாய், குடிகார கணவனிடம் இருந்து மகளை மீட்க போராடியுள்ளார். மதுபோதையில் இருந்த பிரதீப் மகளை சீரழிக்க முயற்சிக்கவே, ஆத்திரமடைந்த மனைவி கணவனை சுத்தியலால் சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். நிலைகுலைந்த கொடூரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

பின்னர், இந்த விஷயம் தொடர்பாக ப்ரீத்தி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் ஓட்டேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கவலை துறையினர், பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரீத்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ப்ரீத்தியின் மகன், மகளிடம் விசாரணை நடந்து வருகிறது.


Advertisement