போதைக்கு பணம் வேண்டி, சென்னை மெட்ரோ இரும்பு தளவாடங்களில் கைவைத்த ஆசாமிகள்; 3 பேர் கும்பல் கைது.! 



Chennai OMR Metro Rail Construction 


சென்னையில் உள்ள துரைப்பாக்கம், ஓ.எம்.ஆர் சாலையில், பெருங்குடி பகுதியில் மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்&டி நிறுவனம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சாலை நடுவே நடக்கும் பணிகள், பிற வாகனங்களுக்கு இடையூறை ஏற்படுத்தாமல் இருக்க, சாலையின் இருபுறத்திலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, நேற்று அங்கு வந்த 3 பேர் கும்பல், இரும்பு தடுப்புகளை ஆட்டோவில் ஏற்றி திருட முற்பட்டது. இதனை கவனித்த கட்டுமான நிறுவனத்தின் வடமாநில தொழிலாளி, அவர்களை தடுக்க முற்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: போதை ஆசாமியால் மீண்டும் அதிர்ச்சி.. சென்னை இரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீற முயற்சி.!

chennai

3 பேர் கும்பல் கைது

அப்போது, காவலாளி மீது கல்வீசி தாக்குதல் நடத்திய கும்பல், ஆபாசமாக பேசி துரத்தியடித்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தனர்.

மேலும், எல்&டி நிறுவனம் சார்பிலும் வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல்துறையினர், விடீயோவின் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரை கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் கண்ணகி நகர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் முத்து, அவரின் நண்பர்கள் சரத் குமார், மணிகண்டன் என்பது தெரியவந்தது. மதுபானம் அருந்த பணம் இல்லாத காரணத்தால், இரும்பை எடைக்கு போட்டு பணம் பெற்று குடிக்க திட்டமிட்டு இவ்வாறான செயலில் இறங்கியதும் தெரியவந்தது. 

இதையும் படிங்க: பெட்ரோல் பங்கில் பணம் கேட்டு தகராறு; தவெக நிர்வாகி சரமாரி தாக்குதல்.!