எனக்கே உறக்கம் வரலை; நீ எப்படி உறங்குவாய்?.. மனஅழுத்ததில் மகனை அடித்து கொன்ற கொடூர தாய்..!

எனக்கே உறக்கம் வரலை; நீ எப்படி உறங்குவாய்?.. மனஅழுத்ததில் மகனை அடித்து கொன்ற கொடூர தாய்..!


chennai-maduravoyal-youngster-killed-by-mother

 

சென்னையில் உள்ள மதுரவாயல், புலியம்பேடு பகுதியில் வசித்து வருபவர் ஹரி. ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி செல்வம். தம்பதிகளுக்கு 23 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருக்கிறார். இவர் மணப்பாக்கம் பகுதியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

நேற்று காலையில் பூட்டிய வீட்டில் செல்வி, மகன் பூவரசன் தலையில் பலத்த காயத்தோடு இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்தனர். இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு அக்கம் பக்கத்தினர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பூவரசன் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்திட, செல்வி சிக்சிஹாய் பெற்று வருகிறார். விசாரணையில், மனரீதியான அழுத்தத்தில் இருந்து வந்த செல்வி, மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார். பின், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். 

chennai

கடந்த சில மாதமாக உடல்ரீதியான பிரச்சனையுடன், மனரீதியான பிரச்சனையையும் செல்வி சந்தித்து வந்துள்ளார். இதற்காக தூக்க மாத்திரை எடுத்து வந்த நிலையில், ஹரி சொந்த ஊரான அரக்கோணம் பகுதியில் உள்ள கிராமத்திற்கு மனைவியை அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். 

அதற்காக சொந்த ஊருக்கும் அவர் சென்றிருந்த நிலையில், இரவில் உறக்கம் வராமல் அவதிப்பட்ட செல்வி மன அழுத்தத்தில் உறங்கிக்கொண்டு இருந்த மகனை கொலை செய்தது அம்பலமானது.