போலி ஐ.ஏ.எஸ் மீது அடுத்தடுத்து மோசடி புகார்கள்.. காவல் நிலையத்தில் கதறும் மக்கள்.!Chennai Maduravoyal Fraud IAS Officer Complaint

மதுரவாயல் பகுதிகளில் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக அடையாளப்படுத்தி வலம்வந்த சுபாஷின் மீது அடுத்தடுத்த புகார்கள் குவிய தொடங்கியுள்ளன. 

சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). இவர் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறி பல இடங்களில் விசிட்டிங் கார்டை கொடுத்து நூதன திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். மதுரவாயல் பகுதியில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சுற்றிவந்த சுபாஷை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக ஊடங்கங்களில் செய்தி வெளியான நிலையில், சுபாஷின் மீது பல்வேறு மோசடி புகார்கள் குவிய தொடங்கியுள்ளது. மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வந்த நபர்கள், சுபாஷ் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாக புகார் அளித்துள்ளனர். சுபாஷுக்கு உதவியாக பாஸ்கர் என்பவர் கூட்டாளியாக செயல்பட்டு வந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

chennai

மேலும், சுபாஷால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட சரக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், பட்டாபிராம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ.10 இலட்சம் மோசடி செய்ததும் அம்பலமானது. பணம் கொடுத்து எமர்ந்தவர்கள் பலரும் சுபாஷை நேரில் கூட பார்த்தது இல்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.