முன்விரோதத்தால் பயங்கரம்: 5 பேர் கும்பலால் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை..!

முன்விரோதத்தால் பயங்கரம்: 5 பேர் கும்பலால் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை..!


Chennai Madhavaram Man Killed by 5 Man Gang

சென்னையில் உள்ள மாதவரம், சீதாபதி நகரில் வசித்து வருபவர் மதன் (வயது 35). இவர் சோழவரம் விஜயநல்லூரில் இருக்கும் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் பணியாற்றி வருகிறார். லாரிகளில் வரும் இரும்பு கம்பியை சில்லறையாக விற்பனையும் செய்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக 4 பேர் இவருடன் பணியாற்றுகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் வேலைக்கு வந்த மதன் முகம் சித்தாந்த நிலையில் அரிவாள் மற்றும் வெட்டுக்காயத்தோடு கொலையுண்டு கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்த சோழவரம் காவல் துறையினர் மதன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரும்பு கம்பிகளை சில்லறையாக விற்பனை செய்வது, வெளிமாநில லாரிகளுக்கு பார்க்கிங் கட்டண வசூல் விவகாரம், தொழில் போட்டி காரணமாக மதன் குமாருக்கும் - பிற கும்பல்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது அம்பலமானது. 

இதனையடுத்து, அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, பார்க்கிங் யார்டில் நுழைந்த 5 பேர் கும்பல் மதனை கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்தது உறுதியானது. காவல் துறையினர் 5 பேர் கும்பலுக்கு வலைவீசியுள்ளனர்.