50 அழகிய இளம் பெண்கள்..! நிர்வாணப் புகைப்படம் எடுத்த இன்டர்நெட் சென்டர் ஓனர்.! பகீர் சம்பவம்..!
50 அழகிய இளம் பெண்கள்..! நிர்வாணப் புகைப்படம் எடுத்த இன்டர்நெட் சென்டர் ஓனர்.! பகீர் சம்பவம்..!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்டர்நெட் சென்டர் நடத்தி வந்துள்ளார் ராஜு சுந்தரம் என்ற 30 வயது இளைஞர் ஒருவர். இவர் தனது இன்டர்நெட் சென்டருக்கு வரும் இளம் பெண்களிடம் நைசாக பேசி அவர்களுக்கு வலை விரிப்பதில் கில்லாடி.
இப்படி தனது வலையில் விழும் பெண்களிடம் தொலைபேசி நம்பரை வாங்குவது, அவர்களிடம் தொலைபேசியில் பேசுவது, அவர்களை மயக்கி தனிமையில் சந்திப்பது, தனிமையான நேரங்களில் அவர்களின் அந்தரங்கங்களை புகைப்படம் எடுப்பது என வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், தான் எடுத்த புகைப்படங்களை வைத்து அந்த பெண்களின் நிர்வாண ஆல்பம் தயாரித்து தனக்கு பணம் தரவேண்டும் என்றும், பணம் தராவிட்டால் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் எனவும் மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் இளம் பெண் ஒருவரிடம் தனது சித்து வேலையை காட்டியுள்ளார் ராஜு சுந்தரம். அந்த பெண் இதுகுறித்து தனது தந்தையிடம் கூற அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து ராஜு சுந்தரத்தின் இன்டர்நெட் சென்டரை போலீசார் சோதனையிட்டுள்ளனர்.
போலீசாரின் சோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ராஜு சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.