மகிழ்ச்சியான செய்தி! தியேட்டர் பார்க்கிங் கட்டண கொள்ளைக்கு வருகிறது முடிவு!

மகிழ்ச்சியான செய்தி! தியேட்டர் பார்க்கிங் கட்டண கொள்ளைக்கு வருகிறது முடிவு!



chennai-high-court-warning-against-to-parking-fees-in-t

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிகமான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், தற்போது வாரத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகிறது. அதேபோல தொலைக்காட்சிகளில் மட்டுமே படம் பார்த்துவந்த காலம் மாறி, தற்போது திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

Multiplex theater

மால், மல்டிப்ளெஸ் என பலவிதமான வடிவங்களில் புது புது திரையரங்கங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க சென்றால் குறைந்தது இராண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை தேவைப்படுகிறது. அதிக விலையில் சினிமா கட்டணம், அதைவிட பலமடங்கு விலையில் உணவு பொருட்கள், அதற்கு மேலாக பார்க்கிங் கட்டணம் என மக்களின் பணத்தை சுரண்டுகின்றன திரையரங்கங்கள்.

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகன கட்டணம் வசூலிப்பது இல்லை என்றும் திரையரங்குகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது என்றும் வழக்கு தொடர்ந்தார்.

Multiplex theater

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.