தமிழகம்

பிப். 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் புதிய தளர்வு.. அசத்தல் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் மக்கள்.!

Summary:

பிப். 1 ஆம் தேதி முதல் ஊரடங்கில் புதிய தளர்வு.. அசத்தல் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் மக்கள்.!

தமிழகத்தில் இம்மாத தொடக்கத்தில் கொரோனா அதிகரித்த காரணத்தால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு கோவில், சர்ச், மசூதி உட்பட மதவழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டன. 

இதனைப்போல, அனைத்து நாட்களும் கடற்கரைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு போன்றவை தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் சென்னையில் இருக்கும் கடற்கரைக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. கடற்கரைக்கு மக்கள் கூட்டமாக செல்ல வேண்டாம் என்றும், முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டுதலலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement