அம்பத்தூர் மூதாட்டி கொலை வழக்கு.. வடமாநில இளைஞர் கைது.. அதிர்ச்சி வாக்குமூலம்.!

அம்பத்தூர் மூதாட்டி கொலை வழக்கு.. வடமாநில இளைஞர் கைது.. அதிர்ச்சி வாக்குமூலம்.!


Chennai Ambattur Old Lady Murder Case Jharkhand Youngster Arrested by Ambattur Cops

அம்பத்தூரை சேர்ந்த மூதாட்டி மரக்சட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னையில் உள்ள அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியில், கடந்த 14 ஆம் தேதி இரவு அப்பகுதியை சேர்ந்த நிர்மலா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நள்ளிரவில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் காலையில் மூதாட்டியை பார்த்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களை கண்காணித்தபோது இளைஞர் மூதாட்டியின் வீடு வழியாக சென்றது தெரியவந்தது. 

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் அம்பத்தூர் இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான சுற்றித்திரிந்த நபரை பிடித்த காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். 

chennai

அப்போது அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், மூதாட்டி நிர்மலாவை கொலை செய்தார் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், "சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் மது போதையில் சுற்றித்திரிந்த திறந்த ஜார்கண்ட் இளைஞர் பிராம் டுடு, திறந்து கிடந்த நிர்மலாவின் சென்றுள்ளார். 

மூதாட்டி வைத்திருந்த செல்போன் மற்றும் கைப்பை, நெத்திச்சூடி போன்றவற்றை திருடி தப்பி செல்ல முயற்சித்தபோது, நிர்மலா இதனை கவனித்து கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிராம் டுடு அருகே இருந்த மரச்சட்டத்தை எடுத்து நிர்மலாவை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்" என்பது உறுதியானது. பிராம் டுடுவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.