பிட் அடித்து மாட்டியதால் மாணவர் விபரீத முடிவு: ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

பிட் அடித்து மாட்டியதால் மாணவர் விபரீத முடிவு: ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!


Chengalpattu SRM University Student Gokul Ram Suicide 

 

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் கோகுல்ராம் (வயது 19). 

தற்போது கல்லூரியில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வில் மாணவர் கோகுல் ராம் பார்த்து எழுதி சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. 

இதனால் மன வேதனையடைந்த அவர், சற்றும் எதிர்பாராத தருணத்தில் கட்டிடத்தின் ஐந்தாவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், கோகுல் ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.