தமிழகம்

பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி மீது வழக்குப்பதிவு.! என்ன காரணம்.?

Summary:

பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி மீது வழக்குப்பதிவு.! என்ன காரணம்.?

தமிழகத்தில் உள்ள கோயில்களில் வார இறுதியில் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரியும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்களை திறக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 12 கோயில்களின் முன்பு பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில், நேற்று சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக கூடுதல், அனுமதி என்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் போராட்டம் நடத்திய வானதி சீனிவாசன் மீது பந்தபசாலை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


Advertisement