வாட்சப் பார்த்துக்கொண்ட பேருந்தை ஒட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்! வீடியோ!

வாட்சப் பார்த்துக்கொண்ட பேருந்தை ஒட்டிய அரசு பேருந்து ஓட்டுநர்! வீடியோ!



Car less driver driving bus watching whatsapp video

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தாலும் பல நேரங்களில் அதுவே மக்களுக்கு எமனாகவும் மாறுகிறது. இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குழந்தைகள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

ஸ்மார்ட் போனை வைத்து ஆபத்தானாக இடங்களில் செல்பி எடுப்பது, தேவை இல்லாத விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது இதுபோன்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மேலும் சிலர் வாகனங்களில் பயணம் செய்யும்போது கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்கின்றனர். அநத வகையில் நேற்று ராமநாதபுரத்திலிருந்து, புதுக்கோட்டை, ஆதனக்கோட்டை, வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு பேருந்தில், ஓட்டுநர் தன்னை நம்பி பேருந்தில் பயணம் செய்பவர்களின் உயிரை சற்றும் மனதில் நினைக்காமல், அதேபோல எதிரில் வரும் வாகனங்களையும் பார்க்காமல் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் -பார்த்துக் கொண்டே பஸ் ஒட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற இரக்கம் இல்லாத, கவன குறைவான ஓட்டுனர்கள் இருக்கும் வரை விபத்துக்களை குறைப்பது மிகவும் கடினம்.