சர்வீஸ்க்கு விட்டு சென்ற காரை சுத்தம் செய்ய முயன்ற பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... கோவை அருகே பரபரப்பு!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது காரில் தமிழக - கேரளா எல்லை பகுதியில் உள்ள ஆனைக்காட்டிற்கு காரில் சென்று திரும்பியுள்ளார். வீடு திரும்பியது காரினை சர்வீஸ் செய்வதற்காக சர்வீஸ் சென்டரில் சென்று விட்டு விட்டு வந்துள்ளார்.
அதனையடுத்து காரினை சுத்தம் செய்வதற்காக சர்வீஸ் சென்டரில் உள்ள பணியாளர் காரினை ஓபன் செய்துள்ளார். அப்போது காரில் பறக்கும் வகையான 3 அடி நீளம் கொண்ட பறக்கும் பாம்பு ஒன்று உள்ளே இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர் உடனே இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே விரைந்து வந்த வனத்துறையினர் காரில் பதுங்கி இருந்த அரிய வகை பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்த சம்பவம் கார் சர்வீஸ் சென்டரில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது