நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்..! தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு..!

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்..! தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு..!


car-got-fired-in-road-near-thiruvallur-high-ways

திருவள்ளூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி  சுப்பிரமணிய நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (42) . இவர் நேற்று அவருடைய மனைவி ஆஷா உடன் திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு  சென்று விட்டு அவருடைய இண்டிகா காரில் வீடு திரும்பியுள்ளார்.

சென்னை  திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதூர் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை  வந்துள்ளது. காரில் புகை வந்த்தை பார்த்த ராஜேஷ்குமார் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கியதோடு மட்டுமல்லாமல் காரில் இருந்த அனைவரையும் உடனடியாக கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.

காரிலிருந்து புகை வந்த சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. கார் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்குமார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு துறையினர், காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். காரில் புகை வருவதை பார்த்ததும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு கீழே இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.