தமிழகம்

சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கு காரில் சென்ற 9 பேர்.! வழியில் நடந்த பயங்கர விபத்து.! தந்தை மகன் சம்பவ இடத்திலேயே பலி.!

Summary:

சென்னையிலிருந்து 9 பேர் இன்று காரைக்குடிக்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சென்னையிலிருந்து 9 பேர் இன்று காரைக்குடிக்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்களது கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொக்கன்குளம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது ஓரத்தில் இருந்த இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அங்கு ஏற்பட்ட விபத்தில், ராமன் (35), அவரது 2 வயது மகன் ரட்சன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராமன் மனைவி உட்பட 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

காயமடைந்த அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த அந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 


Advertisement