நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து... அதிர்ஷ்டவசமாக தப்பிய நான்கு உயிர்...
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் - நளினி தம்பதியினர். இவர்கள் இருவருடன் இன்னும் இரண்டு பேர் சேர்த்து மொத்தம் நான்கு பேர் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
அப்போது கார் திண்டிவனம் - புதுவை பைபாஸ் சாலையில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது காரின் பின்னால் வந்த டிப்பர் லாரி உரசுவது போல் வந்துள்ளது. அதில் காரை ஓட்டி வந்த நளினி பயந்து போய் காரை ரோட்டின் நடுவே இருந்த கட்டையில் மோதியுள்ளார்.

அதில் கார் பல்டி அடித்து தலை குப்புற சாலையில் கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.