பாலத்தில் பறந்து வீட்டுக்குள் புகுந்த கார்.! ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.! அதிர்ச்சி சம்பவம்.!

பொள்ளாச்சி அருகே 40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த கார், கீழே இருந்த வீட்டின் மீது விழுந்ததில் ஒருவர் பலியானார். 


car-accident-in-pollachi

கோவை மாவட்டம் ராமநாத புரத்தை சேர்ந்த, தனியார் நிறுவன உரிமையாளர் ஸ்ரீகாந்த் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் காரில் பொள்ளாச்சி சென்றுள்ளார். நள்ளிரவு, 2:30 மணிக்கு, வடக்கிப்பாளையம் பிரிவு மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி பறந்து அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி, 50 அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் மீது விழுந்தது. 

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் பயணித்த ஸ்ரீகாந்தின் நண்பர்கள்  3 பேரும் படுகாயம் அடைந்தனர். வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்த நிலையில் திடீரென சத்தம் கேட்டதால், வீட்டிற்குள் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தபோது, வீட்டு முன்பு கார் ஒன்று விழுந்து நொறுங்கி கிடந்தது. 

இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் உயிரிழந்த நிலையில் இருந்த ஸ்ரீகாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.